காதல்

என்ன விலை
காதல்?
எங்கு கிடைக்கும்
காதல்?

வறுமையில்
கிடைக்குமா? –அப்படி
வந்தாலும்
நிலைக்குமா?

முதுமையில்
இருக்குமா? –அப்படி
முடிந்தாலும்
இனிக்குமா?

விலைக்கு
கிடைக்குமா? –அப்படி
கிடைத்தாலும்
உதவுமா?

என்ன விலை
காதல்?
எங்கு கிடைக்கும்
காதல்?
=பாசகுமார்.

எழுதியவர் : பாசகுமார் (20-Apr-14, 11:39 am)
சேர்த்தது : சடையன் பெயரன்
Tanglish : kaadhal
பார்வை : 112

மேலே