ஆண்டு போவதை நிறுத்து

ஆ(மா)ண்டு போவதை நிறுத்து

புதிதாய் ஆண்டு பிறந்தாலும்
புத்தாண்டு என்பது பழமைதான்
புதிதாய் குழந்தை பிறந்தாலும்
மனிதன் என்பது பழமைதான்

வருஷம்தான் புதிதாய் பிறக்கிறது
மனுஷ்யம் இன்னும் பிறக்கவில்லை
குழந்தைதான் புதிதாய் பிறக்கிறது
மனிதம் இன்னும் பிறக்கவில்லை

மரிக்கும் ஆண்டு நெருங்குவதை
புதிய ஆண்டு சொல்கிறது
தரிக்க வேண்டி பெருங்கவலை
பிரியும் உயிரும் கொள்கிறது

புத்தாண்டில் கொண்டாட்டம்
புது ஆடை பிள்ளைக்கு
பித்தாக்கிக் கொண்டு ஆட்டும்
மது வாடை பெருசுக்கு

போதைக்கு பாதை காட்டும்
பதாதை மிதிப்போம்
பாதிக்கும் போதை ஊட்டும்
உபாதை தவிர்ப்போம்

புத்தாண்டு மகிழ்வு தனை
பத்தாண்டு பாதுகாக்க
மஸ்தாகும் நிகழ்வு தனை
இவ்வாண்டில் நிறுத்திடுவோம்

எழுதியவர் : மது மதி (21-Apr-14, 6:48 pm)
பார்வை : 821

மேலே