கனவுகள்

தோன்றும் கனவுகள் தாங்காமல்
விழி இரண்டையும் திரையிட்டு மூடுகிறேன்! இருந்தும்,
விழித்திரையை கிழித்துக் கொண்டு கனவுகள் பிறக்கின்றன!
செய்வதறியாது தவிக்கிறேன்!
வலிக்கும் என் இதயமும் அடங்கவில்லை..
பலிக்காத கனவுகளும் மறையவில்லை..!!!!!
விழி இரண்டையும் கனவுகள் நிறைத்தாலும்,
என் இதயம் என்னவோ வெற்றிடமாய் தான் இருக்கிறது..! அங்கு
நம்பிக்கை நீரூற்றி, இன்பங்கள் துளிர்த்தாலும்,
வளர்வதென்னவோ, வெறும் ஏமாற்றம் மட்டும் தான்..! அதனால் தான்
தோன்றும் கனவுகள் தாங்காமல்
விழி இரண்டையும் திரையிட்டு மூடுகிறேன்!

எழுதியவர் : சுதா ஆர் (21-Apr-14, 6:21 pm)
Tanglish : kanavugal
பார்வை : 258

மேலே