+++உன்னோடு வாழ்ந்திட+++

நேசிக்கிறேன் என
நான் சொல்கிறேன்
உனக்கு புரிகிறதா..........!
உனக்கு மட்டும்
புரிந்தால்
போதுமடி- எனை
மறந்து மகிழ்வேன்
என்றுமே
எனக்குள்.........!
நீ கொடுத்த
பரிசுகளை பார்த்து
பார்த்து ரசிக்கிறேன்
நமது காதலை
நினைக்கிறேன்
அனுதினமும்...........!
எனது உணர்வையும்
தாண்டி உன்னையே
தேடி அலைகிறது
எனது உள்ளம்............!
எதிர்பார்க்கிறேனடி
நமது திருமணம் எனும்
நறுமணத்தை..........!