அனைத்தையும் இழந்தால்
கண்களுக்குள் பொத்தி
வைத்த கனவுகள் ,
இன்று இதயத்தை கிழிக்கிறது !
கிழிந்த இதயம் சிந்தும் கண்ணீர் ,
நிறம் மாறி கண்களில் கசிகிறது!!
வார்த்தைகள் கோர்த்து கவி செய்தவளுக்கு,
இதயம் கோர்த்து காதல் செய்யும் விதி இல்லை !
நிலவோடு நடை பழகியவளுக்கு,
துணை நடக்க நிழல் கூட இல்லை !!
இதயத்தின் துடிப்பு காகித்தில் கவிதை என ஆனது ,
ஏனோ அவள் கண்ணீர் துளி அதன் எழுத்துகளை சிதைத்து போனது...
அவன் வார்த்தைகள் அவளை காயப்படுத்தவில்லை,
அவன் நிழல் இல்லா தனிமை.....................
இவள் உணர்வுகளை கொன்று விட ,
காயங்களின் வலி அவள் அறியவில்லை!
இறைவனிடமும் கேட்காத வரத்தை அவனிடம் கேட்டு ,
இறைவனாலும் தர இயலாத மோட்சத்தை அவன் விழி வழி பெற்று,
சந்தோஷத்தில் இழுத்த தன்னிலை மீண்டும் பெறும் முன்னே,
அவன் விருப்பத்தின் வழி காதலுடன் சேர்த்து யாவையும் இழந்தால்!!!