நாற்பதுகளில்…வைரமுத்து

இனிமேல்தான் வாழ்க்கை ஆரம்பம்
செல்வத்தில் பாதியை அறிவில் முழுமையை செலவழி
எதிரிகளை ஒழி..
ஆயுதங்களை மண்டை ஓடுகளில் தீட்டு
பொருள் சேர்
இரு கையால் ஈட்டு ஒரு கையாலேனும் கொடு
பகல் தூக்கம் போடு
கவனம்… இன்னொருக் காதல் வரும்..
புன்னகை வரைப் போ… புடவை தொடாதே…
இதுவரை இலட்சியம்தானே உனது இலக்கு…
இனிமேல் இலட்சியத்திற்கு நீதான் இலக்கு…

எழுதியவர் : வைரமுத்து (23-Apr-14, 12:50 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
பார்வை : 63

மேலே