ஆரோக்கியத்துக்கு தேவை
தோட்டத்தில்
மூட்டுவலிக்கு
நல்லதென்று
முடக்கத்தான் வைத்தேன்.......
ஞாபக சக்திக்கு
வல்லாரை
வைத்தேன்....
கண்ணுக்கு நல்லதென்று
பொண்ணாங்கண்ணி
வைத்தேன்.....
கருங்கூந்தல்
தேவையென்று
கருவேப்பிலை வைத்தேன்.......
இரும்புச்சத்து
வேண்டுமென்று முருங்கை
வைத்தேன்
வயிற்றுப்புண்ணுக்கு
நல்லதென்று
மணத்தக்காளி வைத்தேன்.....
எப்போதும் கிடைக்கும் படி
அரை கீரை சிறு கீரை தண்டுக்கீரை
வைத்தேன்.......
தேகத்துக்கு நல்லதென்று
புதினாவும் கொத்தமல்லியும்
வைத்தேன்......
இது ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல
ஆயுளுக்கும் நல்ல தென்று
சொல்லி பிள்ளைகளுக்கு
கொடுத்தால் முகம்
சுழிப்பதேனோ?