வெட்டுப்பட்டமரத்தின் வேதனைக் குரல்

(20.1.11..அன்று கள்ளக்குறிச்சியிலுருந்து...திருச்சிராப்பள்ளி செல்லும் பயணத்தில் நான் கண்ட உண்மை சூழலுக்கு...எழுதியது...)
(14.12.12... அன்று ஈரோட்டில் நடைப்பெற்ற பூங்கா கவியரங்கில் பரிசினைப்பெற்ற கவிதைதொகுப்பாகும்)

சூழல்::;
சாலை விரிவாக்கதிற்காகநெடுஞ்சாலையில்..உள்ள
மரத்தினை வெட்டிக் கொண்டிருந்தனர்...அருகில் உள்ள மரங்கள்.. துடித்து அலுவதைப்போல்.. ஆடிக் கொண்டிருந்தன... இதன் அருகில் மயானம் ஒன்று இருந்தது.....

"""""வெட்டுப்பட்ட மரத்தின் வேதனைக்குரல்....""""

""செம்மண்ணில் பிறந்தோம்..
செடி மழலையாய் மகிழ்ந்தோம்....
நித்தமும் நீரை ஆகாரம் என்றோம்..
அதிவேக காற்றிலும் ஆளாகி நின்றோம்..
காக்கும் கரங்கள் பலப் பெற்றும்..
காற்றிடம் கற்ப்பை இழந்தோம்..
பக்குவ பருவ நிலை வந்த பின்னே..
பாவையர்க்கு பல மலர் தந்தோம்...
கால மாற்றத்தினால் காய்--கனிகள் பல தந்தோம்
கை நிறைய பலன் பல தந்தோம்..
உச்ச நிலை வெப்பம் தாங்கி
உன்னத நிழல் தந்தோம்...
வறட்சி வரலாறு பல கண்டோம்...
வான் மழை பல தந்தோம்..
எந்தன் உருவத்தை குழைத்த போதும்..
உணவுக்காக உடன் வந்தோம்...
உறுப்புகளை சிதைத்த போதும்...
உலக பயணம் பல வலம் வந்தோம்...
வித விதமாய் பலன் பல தந்தோம்...
விலங்கினத்திற்க்கும் வீடு பல தந்தோம்...
மண்ணில் மணம் பரப்பி....
மருத்துவம் பல தந்தோம்...
வேர்வை தவிர்த்தும்...
வேண்டும் பல செய்தும் ...
என்னை விடாது வீழ்த்தி..
வேர் வரை துரத்தியவர்...
உயிரற்ற உடலாய் கிடக்கையிலே---அதை
சில உறவினர் காண மறுக்கையிலே..
உடன் உள்ளோர் சிலர் என்னை...
உடன் கட்டை ஏற்ற துடிக்கையிலே...
இரக்கமில்லாதோர் மத்தியில்..இருப்பதைவிட..
இறப்பதே மேல் என மனம் நினைக்கையிலே..
நான் உடன் பட்டு உயிர் துறந்தக்காட்சி...
சுற்றி நின்ற என் சொந்தங்களே...
இந்த சோக சூழலுக்கு சாட்சி..
என்னை மாய்த்தவருக்கு இல்லையோ மனசாட்சி..
என் இன மக்கள் காண வேண்டும்...
இனி மகிழ்ச்சியின் காட்சி...
அதற்க்கு மண்ணில் மறுபடியும் வரவேண்டும்..
அந்த மன்னவன் ஆட்சி......
எங்களுக்கு அற்புத வாழ்வு தரும்...
அந்த """அசோகர் ஆட்சி""""

எழுதியவர் : கவிஞர். நா.பிரகாஷ் (24-Apr-14, 9:29 am)
பார்வை : 139

மேலே