இமயப் பெண்ணே
உனது வெட்க்கத்தையெல்லாம் மலையென குவியலாய் குவித்து,
மனிதன் உன்னைத் தொடுவதால், வெட்க்கப்பட்டு!
குளிர்ச்சியாய் நீர்ரென, உன் வெட்கத்தையெல்லாம் நதியென கரைத்துவிடுகிறாய்.
உன்னைத் தொட்டுப் பார்த்தவர்களையெல்லாம் காதலன் என்று உன் தாகத்திற்க்காக பருகிவிடுகிறாய்.
பூ வைத்து, பொட்டு வைத்து, புடவை கட்டி, நகை அணிந்து, அழகை உடையவளா பெண் ??!!!!
என்பதை உணர்த்திவிட்டாய்,
இந்த உலகிற்கு!!!
சில்லென பனியும்,
கல்லென மலையும்,
சிகரமென உயர்ந்த நீ தான் பெண்மை!!!
உண்மையான பெண்மையின் அழகை உயரத்தில் எட்டினாலும் எல்லோரினாலும் நெருங்க முடியாது என்பதை உணர்த்திவிட்டாய்,
என் இமயப் பெண்ணே!!!!