சின்ன மின் விளக்கு
நட்ட நடு நிசியில்
தெருவில் நடந்து சென்றேன்
என்னோடு பயணித்தன
தெருவோர மின்விளக்குகள்
திடீரென மின்வெட்டு
திடுக்கிட்டது என் நெஞ்சு
பார்வைக்கு ஒன்றுமே
புலப்படா அந்த நேரத்தில்
வீதியை வழி காட்டியது
வானத்துச் சின்ன மின் விளக்கு !
விவேக்பாரதி