நீ ர் எங்கே
என் உடலில் இரத்தமாக கலக்கிறாய்...
என் சுவாசத்தின் காற்று மூலம் ஆவியாக இதயத்தில் துடிக்கிறாய்.
ஒரு நாள் நீ என் உயிர் தொடாவிட்டால் வறண்டு விடுகிறேன்.
ஒரு நாள் நீ என் கண்ணில் தென்படவில்லை என்றால், மிகவும் கஷ்டபடுகிறேன்.
நான் துக்கப்படும்போது நீயும் கூட எனக்காக வருந்துகிறாய்.
உனக்காக தினமும் கடவுளிடம் பிராத்தனை செய்கிறேன்.
உனக்காக பல நாட்கள் வாடிகிடக்கிறேன்.
எப்பொழுது மழை நீராய்,
குட்டைகளாக,
குளமாக,
அருவியாக,
நதியாக,
கடலாக,
என் கண்களில் தென்படுவாய் நீர்ரே! தண்ணீரே!! தண்ணீரே!!!
உன்னை தேடி, வாடி, ஓடி கலைத்துவிட்டேன்!!!
நீ எங்கே!!!