குருவுக்காக
குறையாத கல்வியை,
குறையின்றி நிறைவாக
கொடுத்தவரே !
மூன்றாம் இடத்தில் உள்ள நீற்கொடுத்த
மூன்றெழுத்து கல்வியானது,
மூன்றுலகிற்கு சென்று ,
மூவேந்தரை எதிர்க்கும்
வல்லமை நிறைந்தது !
ஏழு பிறவியிலும் கல்வி கற்காவிடினும்,
ஒரு பிறவியிலாவது கல்வி கற்றால் தான்,
ஏழு பிறவியும் பலனடையும் என்று
உணர்த்தியவரே !
நீங்கள்,
ஏழு பிறவியிலும்
மூன்றாவராக வாழ்ந்து,
பிறரின் பிறவி பலனை அடையச் செய்ய
வணங்கி,
வாழ்த்துகிறேன் !