உன் பெயரே கவியாக இருக்கிறது

க-ண்ணசைவில் கவிதை புத்தகம் ..
வி-ழி திரையில் உன் புகைப்படம் ...
ய-ன்னலோரம் நின்று நீ என்னை தேட ...
ர-ணகணமாகிறது என் இதயம் ....
சி-ன்னவரிகள் கவிதையாய் பிறக்கிறது ...
*
*
உன் பெயரே கவியாக இருப்பதால்
நீயே என் காதல் கவிதை...!!!

எழுதியவர் : கே இனியவன் (24-Apr-14, 11:09 am)
பார்வை : 102

மேலே