விழியே விழித்துக்கொள்

காவிரிக்கரை
கற்பித்த வீரம்
கங்கையையும்
கடாரத்தையும்
கட்டுக்குள் கொண்டுவந்ததே...

சிறைப்படுத்திய
சிங்கள கூட்டத்தை
சிறைபிடிக்க முடியாமல் இன்று
சூழ்ச்சியால்
சிக்கித்தவிக்கிறதே?

அரசியலென்னும்
அரக்கன் ஒருபுறம்..
சாதி என்னும்
சாக்கடை ஒருபுறம்..
வாரிசு என்று
வாரிசுருட்டும் ஓநாய்கள் ஒருபுறம்..

வல்லூறுகள் சூழ்ந்து
வஞ்சகம் செய்வதால்
நல்லூரும்
நாடிழந்து நிற்கிறதே?

மதுவிலும்
மாதுவிலும்
மயங்கி சரியும் தமிழா...

மறந்து போனாயா உன்
மண் கற்பித்த வீரத்தை.

எழுதியவர் : கவிஞர் செல்வா (24-Apr-14, 7:12 pm)
சேர்த்தது : அருண்
பார்வை : 92

மேலே