மறக்க முடியாததை மரணம் பிரித்து வைக்கும் 0014
சில ஞாபகங்கள் மறக்க முடியாதவை தான்
சில நேரங்கள் மறந்து போகலாம்
என்னுள் பதிந்த உங்கள் ஞாபகம் அழியக்கூடியது அல்ல
ஒரு நாள் அழித்து போகலாம் .....
எனக்கு நினைவு இருந்த வரை
காதோடு கதை பேசுவேன்
கடிதத்தில் அதை வரைவேன்
ஒரு நாள் அவையெல்லாம் மூடியிருக்கும்
அன் நாட்களில் நான் உயிர் திறந்திருப்பேன்
அடைக்கலம் கொடுத்து
அரவணைத்த உள்ளங்களை
என் உள்ளதிடம் மறக்க சொல்லிக்கொடுக்கவில்லை
பிரிந்து தான் இருக்கின்றேன்
உங்கள் நேசத்தை பிரித்து
வைக்கவில்லை
எப்படியாவது பிரிந்தே ஆகவேண்டும் என்றால்
அன்றே தான் உலகத்தை விட்டு பிரிந்திருப்பேன்......
அ க ம ல் தா ஸ்>>>