இன்று மட்டும் என்னில்

முகப்புத்தகத்தில் முழு மூச்சாய்
அணை கடந்த வெள்ளமாய்
தொலைந்து போன
சமூகம் இன்று

நள்ளிரவில் இசை விருந்து
மதுவுடன் மாது இணைந்து
நாணங்கள் கட்டவிழ்ந்து
தொடருது இரவிப்பயணம்

சேலைகள் எங்கோ போக
யன்னல் போட்ட ஜாக்கட்
இங்கு விற்று தீர்க்க
குட்டைப்பாவடையில்
இன்று இளம் தமிழ் பெண்கள்

தமிழுக்கு தாய்ப்பலூட்ட
வாடகை தாய் வேண்டி
இன்னும் கோசம் போடும் -ஒரு கூட்டம்
ஆங்கிலத்தில் ஆர்ப்பரிக்கும்
மறு பக்கம் இளவட்டம்

தந்தை பிச்சை எடுக்க
அதையும் சுரண்டி
காதலியின் கைகள் சேர்த்து
நடைபயணம் போகும்
கல்லூரி மன்மதன்கள்

இத்தனையும் நடந்தேற
இன்னும் தொடர் கதையாய்
நீண்டு போகும்
காதலின் தற்கொலைகள்

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (24-Apr-14, 6:52 pm)
Tanglish : indru mattum ennil
பார்வை : 96

மேலே