திகில் பொழுதுகள்

யானைபோல்
ஒரு குரங்கு
வால் தும்பிக்கை
போலும்
தும்பிக்கை வாலாகவும்
தாவியடித்ததென்
தலையில்
குப்புற விழுந்தென்!
முகம் பிடித்தேன்

விலங்கு எங்கே?

அடித்தோடிய
நீரில் யாரோ
தள்ளிவிட
முகம் பார்க்க
முடியாமல்
பழைய மரங்களும்
இரும்பு மிச்சங்களும்
அலைக்கழிக்க
மேலும் உள்ளும்
மூழ்கியெழ
மூச்சிறைக்கிறது

இருமினேன்!

தண்ணீர் எங்கே?

பழம் சாப்பிடும்
ஒருவனிடம்
பேசிக்கொண்டிருக்க
எதிர்வாகன
வெளிச்சம்
அவன் முகத்தில்
அய்யையோ அவன்
கண்களைக்
காணோம்
மூக்குகளில்
இரத்தச் சாரல்
ஈரத்தோடு

சரிகிறேன்!

அவன் எங்கே?

நிசப்தம்
பூவாசம்
புடவைவாசம்
கருப்பு வாசம்
செய்யுதென்ற
கம்பீரக் குரலின்
கரகரத்த தடிதடித்த
மிரட்டலில்
கொலை ஓலம்ம்ம்ம்
காது தற்கொலைக்கு
முயற்ச்சிக்க

நடுங்கினேன்!

ஓலம் எங்கே?

நகர்ந்து நகர்ந்து
முட்டிய சாளரம்
திறக்க
குடு குடுவென
ஓடியது
ஒரு பிம்பம்
உற்றுப்
பார்க்கிறேன்

அது
மெல்ல ஒரு
கயிறாகி உருமாறி
என் கபாலத்தில்
இறங்கியது
தலை கிறங்கியது

நெளிகிறேன்!

அது எங்கே?

மாடமாளிகையில்
அழகியோருத்தி
மஞ்சள் நிலவாய்
மின்னியவளின்
அருகே யாரும்
தென்படவில்லை
தொட்டுப்பார்க்க
சகலமும் கரைகிறது
பாதாள மேடையில்
அதிர்ந்த என்னை
சிரித்து சிரித்து
சுற்றுகிறாள்

கட்டிபிடிக்க
எட்டியவளை
நெட்டி நகர
தட்டி விழுந்தேன்
தலை காலையும்
கால் தலையும்
திருகித் தொட
பாதாளத்தில்
கலந்தேன்.

கலைந்தேன்!

அவள் எங்கே?

என் அருகிலிருக்கும்
போர்வை
தானே
எழுந்து
மின்விசிறிக்கும்
எனக்கும்
இடையில் வேகமாக
கர கரவெனச்
சுற்றி நிற்க
அலைபேசி அகோரமாய்
மண்டைக்குள் அலற
அலறி எழுந்தேன்

அலாலாரம்ம்ம்...

அணைத்தேன்
நிசப்தம்
அடச் ச்சே
என திரும்பி படுத்தேன்.

திகில் படம்
பார்த்துத்
தூங்கியவனின்
தலைகாணிப்
பொழுதுகள்.

எழுதியவர் : சர்நா (25-Apr-14, 9:00 pm)
Tanglish : thigil poluthukal
பார்வை : 181

மேலே