விடியல் என்று

பேழைக்குள் ஒழிந்து
போதைக்கு மயங்கி
சிதைக்கு சீராகும்
சிந்தனைவாதிகள்

சீர்க்கெட்டு சினந்து போனதேன் சீர்த்திருத்தம்
சிந்தை மயங்கி அங்கம் தொய்ந்து
அகவை தொலைத்து
இவ்வையகம் வாங்கிட வழிதேடினோம்

கதறும் காரணம் உதறும் தோரணமாய்
வீதியில் வீழ்ந்து கிடக்க
பதறும் பாவசெயலை முன்னிறுத்தி பிதற்றினோம்
தாலியறுத்து தர்மம் பேசினோம்
தரங்கெட்டதை தனதாக்கி பேயுள்ளம் கண்டோம்

தழைக்கும் மரத்தை அதர்மம் என்றும்
உழைக்கும் கரத்தை பிழையென்றும்
உண்மையை உறுத்தலென்றும்
வெட்டிவீழ்த்த துணிந்தோம்
விதி கொண்ட சதியால் மதியிழந்து

கூப்பாடு போட்டு சாப்பாட்டுக்கு இறக்கும்
குவலயம் கண்டதில்லையோ
உன்பாடு என்பாடு உணர்வது எப்பாடு
வழிதிருத்த விழையாதே விழிதிருத்து
விடியல் உனக்கல்ல உணர்வுக்கு
...........................???

எழுதியவர் : bhanukl (26-Apr-14, 5:30 am)
Tanglish : vidiyal enru
பார்வை : 151

மேலே