+சந்தித்த நிமிடங்கள்+

சந்தித்த நிமிடங்களை
சிந்தித்த பொழுது
வந்திட்ட கண்ணீரும்
நொந்திட்ட தறிவாயோ!

மனம் நொந்து
உயிர் வெந்து
உனைக் காண
நான் வந்தால்

சினம் தந்து
சுமை தந்து
சுகம் எடுத்தே
நீ சென்றாய்...!

மனம் கொன்று
எனைக் கொன்று
உயிர் கொண்டு
நீ செல்ல‌

விழி பிதுங்கி
மொழி நடுங்கி
வழி மறந்து
நான் மெல்ல‌

உனை உணர்ந்தேன்
எனை உணர்ந்தேன்
நீ மறுத்த‌
காதல் மறந்தேன்

நா தாரி
நான் மாறி
ஊ தாரி
பட்ட மிழந்து

பெரு முயற்சி
தான் எடுத்தேன்
பேர் எடுத்தேன்
வெற்றி கொண்டேன்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (26-Apr-14, 2:21 pm)
பார்வை : 208

மேலே