என் தம்பி உனக்காக

சக உதிரம் கொண்டதனால்
சகோதரன் ஆனாய் நீ
என் சஞ்சலங்கள் களைந்துவிடும்
சகலமும் நீயே தான்!

ஒரு வார்த்தை நான் சொல்ல
மறு வார்த்தை கேட்டதில்லை
உன் சொல்லின் பொருளுணர்ந்து
அதை மறுக்க நினைத்ததில்லை!

இளையவனாய் நீ பிறந்தாய்
இன்பங்கள் பல கொண்டு வந்தாய்
நின் இன்முகம் கண்டுவிட
இன்னல்கள் ஓட வைத்தாய்!

தொட்டிலிட்ட காலத்திலும் வேற்றோர்
தொட யென்றுமே விட்டதில்லை
குட்டி குறும்பு செய்திடினும்
முட்டி போட விட்டதில்லை!

உன் கண் அயர ஆராரோ
நான் பாட விழித்திருந்தேன்
நீ தத்தியடி வைக்கையிலே
கை பிடிக்க காத்திருந்தேன்!

சின்ன கோபம் கொண்டதுண்டு
செல்ல சண்டை போட்டதுண்டு
உண் கண்ணில் ஈரம் கண்டால்
என் மனமும் ரணமாய் போனதுண்டு!

நின் ஆசை துறந்தேனும்
என் ஆசை நிறைவேற்றிடுவாய்
எத்திசை நான் சென்றிடினும்
உன் விசை என்னை ஈர்த்திடுமே!

இளமையும் விட்டு விலகிடலாம்
முதுமையும் வந்து சேர்ந்திடலாம்
பேதமை கொண்டு வாழ்வினிலே
வேற்றுமை மட்டும் கொண்டதில்லை!

மணமாலை நான் சூடி
மணவாளன் கரம் பிடித்து
மணியாய் பிள்ளை பெற்றிடினும்
மங்கிவிடாது நம் பாசம் என்றும்
மறிப்பதில்லை நம் நேசம்!

எழுதியவர் : RajaRajeshwari (26-Apr-14, 7:23 pm)
Tanglish : en thambi unakaaga
பார்வை : 4808

புதிய படைப்புகள்

மேலே