பாவம்
பாவத்தின் பட்டறைகள்
சாபத்தின் இருட்டறைகள்
கடவுளின் கழிப்பறையில்
கழிந்து ஒழுகும் வழிசல்கள்
வழுக்களை உண்டு
வாழும்
பாவப் புழுக்களுக்கு
புரிவதில்லை
மற்றவர் வலிகள்
கருக்கள் கலைந்து
கரைந்து வழிந்தாலும்
அழுவதில்லை அவைகள்
பாவப் பருக்கள்
புணர்ந்து
பரவும் மருக்களில்
புனிதமில்லை எதுவும்
போதைப் புதர்களில்
புதைந்துக் கொண்டு
கீதை என்பர் மதுவும்
காமத் தெருக்களில்
தொலைந்து கொண்டு
புனிதம் என்பர் அதுவும்
துர் மாதின் மடியில்
மயங்கிக் கொண்டு
மனிதம் என்பர் இதுவும்