முழுநேர அடிமை

மெல்ல மெல்ல மேயப்படுகிறது
மனித மூளைகள்.
சினிமா திரையரங்குகளின்
வணிக வெறிகொண்ட வாய்களால் ..!

நீண்டு தொங்கியது
சமூக ஒழுக்கம்
சினிமாக்களின் சிற்றின்ப நெரிசலில்
உணர்வற்ற சடமாய் ...!

எத்தனை உயரம்
திரைக்கட்டணம் ஏறினாலும்
எப்படியும் படம் பார்க்கும்
அப்பாவி
ரசிகர்களின் வருகையால் .
பலமாக்கப்பட்டது பகல் கொள்ளைகள் !.
பலியாக்கப்பட்டது மனித உழைப்புகள்.!

நூறுநாட்கள் ஓடிய படங்களின்
பட்டியலை பார்க்கையில்
தெளிவாய் தெரிகிறது
ஏமார்ந்துபோன
மனிதனின் தலையெழுத்துகள் !...

பட்டதாரி கூட்டங்கள் ....
புதுப்பட வருகைக்கு
தோரணம்கட்டி தொழுகை நடத்துகையில் தெளிவாய் புலப்பட்டது
நம் தேசத்து தூண்கள்
வெறும் மண்ணென்று.......

பஞ்சமில்ல
பாலபிசேக நிகழ்வால்
மனிதம்
தனக்குத்தானே பலூற்றிக்கொண்டது
வாய்திறந்து வசதியாய் .....

கதாநாயகனின்
காலடி ஓசைக்காய்
கைத்தட்டலும் விசில்சத்தமும்
அரங்கத்தையே அதிரூட்டுகயில்
செத்து வீங்கியது தன்மானம் ...
கொழுத்து பெருத்தது அவமானம் ..

அதிகரித்தது
நாறிப்போன சினிமாக்களின் சொர்க்கம்
கவிழ்ந்து சாய்ந்தது
கட்டிக்காத்த மொத்த மானமும்
தலைநிமிர வழியின்றி .....

திணிக்கப்பட்டோம்
வக்கீர சினிமாக்களுள்
வசதியாய்
பிணைக்கப்பட்டோம்
ஒரே கயிற்றில் அடிமையாய் .....

ஆபாசம் திரண்ட காட்சிப்பதிவாய்
நீளுகிறது
சினிமாக்களின் கழிவிரக்க படைப்புலகம்
பலூட்டிய
எம் தாய்மையின் பாலுருப்புகூட
காட்சிப்பதிவாக்கி காசக்கப்பட்டது
எம்மிடமே! ......

கட்டணம் கொடுத்து
கலாச்சாரத்தை கொன்றுவிட்டோம் !
பொழுதுபோக்காகவே
வெகுதூரம் தொலைந்துவிட்டோம் !
சினிமா பாலைவனத்தில்
முழுநேர அடிமையாய் .....
.

எழுதியவர் : நேதாஜி.அ (26-Apr-14, 4:36 pm)
சேர்த்தது : நேதாஜி.அ
பார்வை : 78

மேலே