உனக்காக ஒரு கவிதை

உன் விழி பார்த்து
கவி வடிக்க காத்திருந்தேன்
பார்த்த விழி பார்த்தபடி
எனையே நான் மறந்தேன்!

தென்றல் தொட இதழ் விரியும்
மலராய் மாற்றி விட்டாய்
தன்னைச் சுற்றும் பூமி இன்று
என்னை சுற்ற செய்திட்டாய்!

உறை பனியும் கொதிக்க வைத்தாய்
பிடி தணலும் தணிய வைத்தாய்
ஆசை நெஞ்சுக்குள்ளே அனுதினமும்
ஆராத இன்பம் நீயே தந்தாய்!

வாழும் காலம் முழுதும்
உன் மார்பினில் சாய்த்து விடு
உயிர் மறிக்கும் வேளையிலும்
உன் மடியினில் கிடத்தி விடு!

திரும்பும் திசை யாவும் நின்
திருமுகம் தேட வைத்தாய்
இமைக்கும் நொடி பொழுதும் உன்
நினைவே தேங்க வைத்தாய்!

நம் உறவின் நெருக்கத்தை
பிரிவினில் உணர்த்தி விட்டாய்
அன்பின் ஆற்றல்களை
என்பிலும் நுழைத்து விட்டாய்!

உன் நணியில் இருந்திடவே
நின் நிழலாய் மாற்றி விடு
அழகே உனைப் பிரியும்
நொடி பொழுதையும் தூக்கிலிடு!

எழுதியவர் : RajaRajeshwari (26-Apr-14, 8:04 pm)
பார்வை : 202

மேலே