கண்ணீரின் பதில்

உன்னோடு பார்க்கையில்
சந்தோஷத்தை கொடுத்த
கடல் அலைகள்...
இன்று தனிமையில்
என்னை பார்த்து சத்தமாய்
கேள்விகேட்டு நகைகிறது...
அன்று உன்னவளின்
சிரிப்பில் என்னை
மறந்தாய்...
இன்று என் அலையின்
சிரிப்பில் எதற்காய்
அழுகிறாய் என்று..
என் கண்கள் மட்டும்
கண்ணீரால்
பதில் சொன்னது..
நீ அவளை நனைத்து
கொஞ்சிய போது அன்று உன்னை
மறந்து அவள் இன்பத்தை ரசித்தேன்..
இன்று அவள் என்னை
கண்ணீரில் நனைத்துபோக
என்வலிமறக்க உன்அலையினை ரசிக்கிறேன்..!
..கவிபாரதி..