கடிகாரம்

மரணத்தை நோக்கிய வாழ்வை
மணியளவில் காட்டும் நண்பன்
பொழுதை பொக்கிசமாக
எடுத்துரைக்கும் புதையல்
எந்நேரமும் உறங்காமல்
உறங்குபவர்களை
விழித்தெழ செய்யும்
வீட்டுக் கதிரவன்
முன்னோக்கிய வாழ்வை
பின்னல் எடுத்துச்செல்ல முடியாததை
நிருபிக்கும் விஞ்ஞானி
நொடிப்பொழுது ஒவ்வொன்றையும்
நொடிமுள்ளால் சொடுக்கிட்டு
சவால் விடும் எதிரி…

எழுதியவர் : விநாயகபாரதி.மு (28-Apr-14, 11:57 am)
Tanglish : kadikaaram
பார்வை : 421

மேலே