விதியின் விளையாட்டு27

ரிஷானி ஷிவானியிடம் சொல்லிவிட்டு தனது செல்போனை எடுத்து மதனுக்கு அழைப்பை கொடுத்தாள்.....

பேசி முடித்ததும் அவளிடம் சென்று மதனும் உன் திருமணத்துக்கு வர போறான் இந்தா நீயும் கூப்பிடு என்று ஷிவானியிடம் போனை கொடுத்தாள்...!

"ஷிவானியும் நலம் விசாரித்து விட்டு அவனை திருமணத்திற்கு அழைத்து விட்டு போனை வைத்தாள்"

மண்டபத்திற்குள் சென்றதும் சமய சடங்குகளும், போட்டோ எடுத்தல், மாமன்முறை என பல சடங்குகளும் நடந்து கொண்டிருந்தது....

அப்பொழுது அங்கு மதனும் அவனுடைய நண்பர்கள் இரண்டு பேரும் வந்து கலந்து கொண்டனர்.

அந்த சமயம் மாப்பிள்ளை வீட்டாரும் வந்து சேர்ந்தனர்.

திருமணத்தில் ரிஷானிக்கும் என்று ஒருமுறை உண்டு அந்த முறையை மேடையில் முடித்து விட்டு கிழே வந்தாள் ரிஷானி.........!

அனைவரது பார்வையும் ரிஷானியின் மீதுதான் சந்துரு உட்பட மதன் வரைக்கும் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தனர்........

ஆனால் அவளோ மற்றவர்கள் யாரையும் கண்டுக்கவில்லை!!! மதனை அழைத்து பெற்றோரிடமும்,இவள் நெருங்கிய தோழிகளுடனும் அறிமுகம் செய்து வைத்தாள்.

சந்துருவின் பெற்றொருக்கு அவள் அவனுடன் மட்டும் சிரித்து சிரித்து பேசுவதும் வெறுப்பாகவும், கோவமாகவும் இருந்தது....!

சந்துரு அவளை ஒரு குறும்புத்தனமான பொண்ணாகவே பார்த்து வந்தான் அதனால் அவள் மதனிடம் பழகுவதை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை, அவளது வெகுளித்தனைத்தை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான்.......


அவன் பார்ப்பதை இவளும் பார்க்காமல் இல்லை ஆனால் அவன் கவனத்தை மதன் மீது திருப்புவதற்காக வேண்டுமென்றே மதனை அழைத்து பேசிக்கொண்டிருந்தாள்......!

திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தது.
அனைவரும் இன்முகத்துடன் வாழ்த்திவிட்டு சென்றனர்!!!!!!

அங்கு வந்த ஜோசியர் "எல்லாம் நன்மைக்கே கடவுளே என் பிள்ளையை நீதான் காப்பாற்றணும் அப்பா என்று சொல்லி பக்கத்தில் வந்து வாழ்த்தி விட்டு சென்றார்.

போகும் போது அவர் ஷிவானியை கவலையோடு கண்ணீருடன் பார்த்து விட்டு வருகிறேன் அம்மா என்று கண்களால் சொல்லிவிட்டு நகர்ந்தார்"............

அவரின் அந்த பார்வைக்குள் ஏதோ ஆயிரம் அர்த்தங்கள் புதைந்து இருப்பதாக உணர்ந்து கொண்டாள் ஷிவானி......!

வந்தவர்கள் அனைவரும் வாழ்த்த!!......"

நடக்கப்போகும் கஷ்டங்களை அறியாதவளாய்??? மண்டபத்திலிருந்து தன கணவன் வீட்டிற்கு சென்றாள் ஷிவானி........!

போகும் போது தன பெற்றோரையும், தங்கையையும் ஒரு வித ஏக்கபார்வையுடன் பார்த்து விட்டு கண்ணீருடன் நகர்ந்தாள்.

அக்காவை முதல் முறையாக பிரிவதை நினைத்து மிகவும் வேதனையடைந்தாள் ரிஷானி.விதி தொடரும்....

எழுதியவர் : ப்ரியா (28-Apr-14, 4:06 pm)
பார்வை : 284

மேலே