சிறுகதையின் தொடர்கதை

வாழ்க்கை என்பது வலிகள் நிறைந்ததே
அதில் வழி தேடி அலைவது வாடிக்கை
ஏற்றங்களும் இறக்கங்களும் நிறைந்தே
இருந்தாலும் ஏனோ பலருக்கு இந்த உலக
வாழ்க்கை ஏமாற்றத்தையே தருகின்றது
வாழ்வோம் போராடி முடிந்தவரையல்ல
நாம் முடியும்வரை என்ற முன்னுரையோடு ,,,,

..."" சிறுகதையின் தொடர்கதை ""...
(பாகம் ஐந்து)

அழகிய வாழ்க்கை அன்பான கணவன்
பாசம் பொங்கும் மகனோடு கவலையில்ல
நிறைவான மகிழ்ச்சி அங்கு கொப்பளிக்க
ஆனந்தமாய் அவள் மனமதில் தத்தளிக்க
அழகிய ஜோடி புறாக்களாய் வட்டமிட்டு
வாழ்க்கை வானத்தில் பறந்து திரிந்தனர்
கடந்த கால கதை பேசி நிகழ்கால நிழலில்
நிம்மதியாய் நெஞ்சோடு நெஞ்சணைத்து
இறைவனுக்கு நன்றிகள் சொல்லி இன்புற
காலங்கள் மெல்ல கரைய கண்கள் நிரந்து
கணவனை வழியனுப காலம் நெருங்கிவர
மீண்டும் வணிகத்திற்க்காய் கடல் கடக்க
கண்ணுக்கு மறைவாய் மறந்துவிட்டான்
கண்ணீர் சுமக்கும் பல்லக்காய் இவரின்
காதல் சுவடுகளை கடிதங்களில் பரிமாற
வாழ்க்கை தொடர்ந்தது அஞ்சல் வழியில்
படுக்கையில்கிடந்த கணவன் அன்னையை
கண்ணும் கருத்துமாய் தன் அன்னைபோல்
அன்பையும் அரவணைப்பும் ஒன்றுசேர்த்து
குழந்தையோடு அவரையும் குழந்தையாய்
அன்னமூட்டி கழிவுகளையும் சுத்தம் செய்து
அயராது உழைத்து அன்பின் உறைவிடமாய்
அவள் இரட்டை தாயாய் பரிணமித்திரிந்தால்
கணவனின் வருகை காதலின் லீலையென
கனிக்குள் கருவொன்று உருவாகியிருந்தது
காதல் சுமந்து தன் கண்கள்பூத்து கண்ணான
கணவன் வரவை எதிர்பார்த்து காத்திருந்தாள்
பிள்ளை கனியமுதை கையில்லேந்தியவாறு
தந்தை வருவான் உனக்கு தாலாட்டு பாடிட
நெஞ்சில் சேர்த்தணைத்து கதைகள் சொல்லிட
கரையாதே மகனே நீ காலம் வெகுதூரமில்லை

என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்....

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (28-Apr-14, 1:36 pm)
பார்வை : 124

மேலே