சிறுகதையின் தொடர்கதை

சிறுகதையின் தொடர்கதை

வாழ்க்கை என்பது வலிகள் நிறைந்ததே
அதில் வழி தேடி அலைவது வாடிக்கை
ஏற்றங்களும் இறக்கங்களும் நிறைந்தே
இருந்தாலும் ஏனோ பலருக்கு இந்த உலக
வாழ்க்கை ஏமாற்றத்தையே தருகின்றது
வாழ்வோம் போராடி முடிந்தவரையல்ல
நாம் முடியும்வரை என்ற முன்னுரையோடு ,,,,

..சிறுகதையின் தொடர்கதை..
(பாகம் நான்கு)

கவலை அறியாத குழந்தை பருவம்
குதூகல வாழ்வின் உன்னத தருணம்
வழமையாய் தோழிகளோடு விளையாட
எதோ மாற்றம் அவளுக்கும் புரியவில்லை
விளையாட்டில் பிடிகொடுக்காத இவள்
முதலாமவளாய் தோழியிடம் அகப்பட
தோழியோ சந்தோசத்தில் துள்ளி குதிக்க
அடிவாயிற்றை பிடித்தவாரு அலறினாள்
அன்று மொட்டு விரிந்து மலரேன்றானது
பூவையன்று பூப்படைந்தால் பூரிக்கும்
பட்டாம்பூச்சியென பறந்தே திரிந்தவள்
பாவாடை தாவணிக்குள் தஞ்சம்புகுந்தாள்
பெண்ணுக்கு பெண்மையின் அரங்கேற்றம்
குழந்தை பருவம் கலைந்து கன்னிப்பருவம்
உற்றாரும் உறவுமுறையும் கூடி வாழ்த்த
குறும்பாடு வெட்டி தந்தை விருந்துவைக்க
விசேசமாய் நடக்கிற சம்பரதய சடங்குகள்
இன்பத்தில் குடும்பமே திளைத்து நிற்க
மகிழ்ச்சியான இந்த வேளையிலும் ஏனோ
அவள் முகம் சிறு வாட்டத்தோடு இருந்தது
தோழிகளை பார்த்து மெல்ல சிரித்தாலும்
சொல்லாது மனதுக்குள் அழுதுகொண்டால்
இன்றோடு தனக்கு கிடைக்காமல்போகும்
தெருவோரம் தோழிகளோடு விளையாட்டு
என்றுமது எண்ணிப்பார்க்கும் எண்ணத்தில்
தேக்கப்பட்ட கடந்தகால நினைவுகளானது
நினைவுகள் தொடர கனவுகள் நிறைந்த
பருவத்தோடு நாமும் தொடர்ந்து செல்வோம் ,,

என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்....

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (28-Apr-14, 10:15 am)
பார்வை : 90

மேலே