சூபியின் மொழி

''தேடுங்கள் கிடைக்கும் ''
சூபியின் மொழி

சூபி ஞானியின் பழம் தந்த பாடம் இங்கே நமக்கும்.... .

சூபி ஞானி ஒருவர் தான் தங்கியிருந்த ஒரு பகுதியில் அழகான மலர்த் தோட்டத்தையும் பழம் தரும் மரங்களையும் நட்டு வளர்த்து வந்தார். யார் வந்து கேட்டாலும் அவர்களுக்குத் தேவையான பழங்களையும் மலர்களையும் கொடுத்தார்.

ஒரு சிறுவன் தினந்தோறும் இதை கவனித்து வந்தான். அவனுக்கு அந்தத் தோட்டத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட பழத்தை சாப்பிட வேண்டுமென்ற ஆசை...ஆனால் அதை அவரிடம் கேட்க தைரியமில்லை.

கடைசியில் ஒருநாள் பழத்தை ஞானிக்குத் தெரியாமல் திருடுவது என்று தீர்மானித்தான்.ஒருநாள் மாலை இருள் சூழும் நேரத்தில் தோட்டத்திற்குள் நுழைந்தான். கனிந்த மரம் தாழ்ந்திருக்கும். பக்குவத்தின் அடையாளம். பழ மரம், கற்றுத் தரும் பண்பாட்டுக்கு பாடம் இது.எட்டும் தூரத்திலிருந்த பழங்களை பறித்து அங்கிருந்து நகர்ந்தான் .மரங்களின் மறைவில் மறைந்து மறைந்து வெளியே எட்டிப் பார்த்தான். எதிரில் ஞானி நின்று கொண்டிருந்ததால் அவரைப் பார்த்ததும் மனது பக்கென்றது. உடல் வியர்த்தது. வார்த்தைகள் வர மறுத்தன.

''ஐயா !என்னை மன்னித்து விடுங்கள். நான் ஏழை. என் தாயார் கூலி வேலை செய்து என்னைக் காப்பாற்றுகிறார். என்னைத் தண்டித்து விடாதீர்கள்.'' என்று கெஞ்சினான்.

ஞானி அவனைப் பரிவுடன் பார்த்தார்.''உன்னுடைய நிலைமை எவ்வளவு பரிதாபகரமாக இருக்கிறது என்பதை நீயே சொல்கிறார். இதற்குக் காரணம் நீ செய்த தீய செயல் தானே.?எப்பொழுதும் நேர்மையாக உழைக்க வேண்டும். பழத்தைத் திருடாமல் என்னிடம் நேரிடியாகக் கேட்டிருக்கலாம். நான் கொடுக்கிறேன் கொடுக்கவில்லை என்பது வேறு விஷயம். கொடுத்தால் உனக்கு மகிழ்ச்சி .கொடுக்க வில்லையென்றால் திருடாமல் இருந்தோமே என்ற மன நிம்மதி உனக்கு கிடைத்திருக்குமே.>' என்று பரிவுடன் சொன்னார்.

இதுதான் ஞானியின் பாட மொழி .கொடுபதற்கு அன்புதானே காரணம் .அன்பும் ஒரு வகையில் பழம் தானே.

அந்தப்பையன் குற்ற உணர்வுடன் குறுகுறுத்து நின்றான். அவனுக்கு பை நிறைய பழங்களைப் பறித்துக் கொடுத்தார்.

நன்றிபேராசிரியர் க ராமச்சந்திரன்.

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (28-Apr-14, 9:54 am)
பார்வை : 132

மேலே