தவிக்கிறேன்

விழி நுழைந்த காதல் மொழி தேடுது
வார்த்தை மொட்டவிழ்க்காமல் இதழ் மூடுது
தொண்டை வாசல் வரை வார்த்தை வசமாகுது
வந்த பின் வந்த வழி வழிந்தோடுது

இது கணங்கள் கரைந்து கனக்கும் பொழுது
ரணங்கள் திறைந்து விறைக்கும் பொழுது
வாசல் தாண்டி காதல் வந்தும்
வரம்பு தாண்டா வார்த்தைப் பழுது

அச்சர அருவிகள் ஆயிரம் ஊறும்
அச்சங்கள் அவைக்கு அணையாய் மாறும்
இச்சையின் பச்சை எரியும் பொழுதும்
எச்சரிக்கும் சிவப்பும் சேர்ந்தே எரியும்

கழுத்து வரை வார்த்தையின் கால்கள் ஏறும்
கழுத்தைத் தாண்ட வெட்கக் கழுதை உதைக்கும்
பழுத்த வார்த்தை கனிந்து நாவைத் தாண்ட
பயத்தின் வலுத்த பாம்பு
அதைப் பாய்ந்து விழுங்கும்

இதயம் இறங்கி வயிற்றை கடிக்கும்
வலித்த வயிறு வயலின் இசைக்கும்
வியர்வை வியர்த்து கயிறு திரித்து
உயிரின் அடியை முடிந்து இழுக்கும்

மொழியின் ஆமை ஓட்டுக்குள் ஒழிய
வார்த்தை முயல் பொந்துக்குள் முடங்க
மௌனம் மட்டும் தனித்து ஓடி வெல்லும்
காதல் பந்தயம் இனி தினம் தினம் தொடரும்

எழுதியவர் : (28-Apr-14, 5:16 pm)
Tanglish : thavikkiren
பார்வை : 151

மேலே