காதல் அங்கிகரிக்குமவரை
உன்னைப்போல்
இந்த நிலவும்
நாளும் ஓர்
உருவாய்
தென்பட்டு
என் இரவை வேட்டையாடி
செல்கிறது
உன் நினைவோ
காற்றினில் படர்ந்து
என்னை
சுழட்டி வீசி போகிறது
பூக்களின் இதழ்கள்
உன் பெயரை சொல்ல
வாசம் யாவும்
என்னை கொளுதிபோடுகிறது
உன் ஞாபகதீயின்
தீண்டலில்
என் மனம்
உன் நிழலில் அமர
தன் பங்கிற்கு
அதுவும்
முள்ளாய் குத்த
எங்கே சென்று சேருவேன்
உன் மௌனங்கள்
உடைந்து
காதல் அங்கிகரிக்குமவரை?