ஹைக்கூ

உயிரோடு இருப்பதாய்
ஏமாறும் பறவைகள்
காவல் பொம்மை

அறுவடைக்குப்பின்னும்
கம்பீரம் குறையாமல்
காவல் பொம்மை.

காத்ததற்கு ஏதுமில்லை
கைவிரித்துக்காட்டும்
காவல் பொம்மை.

பயம் காட்டிச்சிரிக்கிறது
பறவைகளை
காவல் பொம்மை.

எழுதியவர் : க.இராமஜெயம் (28-Apr-14, 9:34 pm)
சேர்த்தது : Ramajayam
Tanglish : haikkoo
பார்வை : 115

மேலே