ஞாலம் காக்கும் ஞாயிரன்றோ
கதிரவன் என்றும் மறையவில்லை
கணப்பொழுதும் உறக்கமில்லை
காணும் காட்சிகள் நிழற்படமே
கண்களை மூடி இருட்டென உணர்வதுபோல்
வெண்ணிலா வந்தால் குளுமையென்றால்
வெளிச்சம் தருவது ஞாயிரன்றோ
வெற்றிடம் புவியில் ஏதுமுண்டோ
வென்றிட முடியா உலகமது