இன்றைய தலைமுறை

இன்றைய தலைமுறை
---------------------------------

நம்மை எங்கே அழைத்து செல்கிறார்கள்

நமது இன்றைய இளைய சமுதாயத்தார்?

உண்ணும் உணவு உடுக்கும் உடை

பேசும் மொழி கேட்கும் இசை

என்று நமக்கே தனி இடம்

நேற்று வரை இருந்தது

இன்று இவை எல்லாம்

எங்கோ ஒளிந்து மறைந்தனவோ?

இட்டிலி, தோசை தேவை இல்லை

இன்றைய தலை முறைக்கு

பிட்சா, பாஸ்தா -மற்றும்

சப்வே பர்கர் தான் இவர்கள்

விரும்பி ஏற்கும் உணவு

வேட்டி சட்டை ஐயோ

வேண்டாம் வேண்டாம் என்பார்

ஜீன்சும் டீ ஷர்டும் இவர்கள்

போட்டு கழட்டாத ஆடைகள்

முடிக்கென்று இவர்கள் அலங்காரம்

அதுதான் கலைத்த முடி

பாப்பும்,ராப்பும்

இவர்கள் சங்கீதம்

மகளிர் என்றால்

நெற்றியில் பொட்டு

ஏற்க மறுப்பு

மஞ்சள் பூசுவது இழுக்கு

பாவாடை, சிற்றாடை

இன்று காண்பது அரிது

டைட்ஸ் ,ஜீன்ஸ்

இவர்கள் ஏற்பு

ஆங்கிலம் தான்

பேசும் மொழியும்

ஐயகோ! இளைஞர்களே

எங்கு அழைத்து செல்கிறீர்கள்

நமது கலாசாரத்தை?

எங்கே சென்றது

நமது நாகரீகம் ?

நமது மொழி?

நமது பண்பாடு?

இவை மறைந்தால்

நமக்கேது முகவரி?

வெட்கம்! வெட்கம்!





i











]

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் (30-Apr-14, 8:59 am)
பார்வை : 117

மேலே