எச்சரிக்கை

முக்கால்
கண்
மூடியிருக்க

கூர்ந்து
குவித்துப்
பார்க்க
முடியவில்லை

என்னால்
என்னை
அசைக்க
முடியவில்லை

வெள்ளை
ஆடைக்காரி
காத்து
நிழலாட

ஐயோ
எங்கே
நான்?
இதென்ன
இருட்டு?
இறுக்கம்?

ஏதோ
பேசுகிறாள்
அருகில்
வந்து
விட்டாள்
கண்ணில்
விரல்
நுழைக்கப்
பார்க்கிறாள்

பிரள்கிறேன்
சில கரங்கள்
என்னை
அழுத்துகிறது
அதட்டுகிறது

எதையோ
வாயில் ஊற்ற
துப்ப முடியாமல்
தொண்டை
நணைகிறது
துர்நாற்றம்
துளைக்கிறது

சிரித்து
முறைத்து
அழுத்தினாள்
சிதைந்து
கிழிந்து
சிதறினேன்

எரிச்சல் ஒரே
எரிச்சல்
எழப்பார்த்து
எத்தனிக்க

இரத்தத்தில்
இரசாயனம்
சலித்துப்
போனது

இரணத்தில்
ரௌத்திரம்
வலித்துப்
போனது

நோகும்
விபத்தின்
அடுத்த
நொடிகள்

எழுதியவர் : சர்நா (30-Apr-14, 11:14 am)
Tanglish : yacharikkai
பார்வை : 206

மேலே