எப்படி வந்தாய் என்னுள்

எப்படி வந்தாய் என்னுள்..?
எந்த நிமிடத்தில் என் இதயத்தில் இடம் பிடித்தாய்..?
எந்த வினாடியில் என் வினாக்களுக்கு விடையளித்தாய்..?
எப்போது மாற்றினாய், எரிமலை போல வெடித்துச் சிதறும் என் மனதை, எழில்மிகு ஓவியமாக..?
எப்படி அடிமையாக்கினாய், அடங்காத என் ஆண்மையை..?
எந்தச் சிறையில் அடைத்தாய், என் சீறிப்பாயும் கோபத்தை..?
எப்படி மாற்றினாய் என் வீணாய்ப்போன இதயத்தை விலையுயர்ந்த பொக்கிஷமாக..?
காளை என கர்வம் கொண்ட என்னையும் எப்படி காதலிக்க வைத்தாய்..?
தயவு செய்து தாமதிக்காமல் சொல்லிவிடு பெண்ணே..
எப்படி வந்தாய் என்னுள்..?