இடைவெளிக்கு இடைவெளி

இடைவெளி என்பது
எதுவும் அற்றதுதான்
இடைவெளி இருப்பது
எதற்கும் ஏற்றதுதான்

இடைவெளியின் உள்வெளிகளைப்
புரிந்து நடப்பவன்
தடைக்குழிகளை வெளிப்படையாகத்
தெரிந்து நடப்பவன்

காதலுக்கு இடைவெளி காமம்
நட்புக்கு இடைவெளி கடன்
உறவுக்கு இடைவெளி நாக்கு
வணிகத்துக்கு இடைவெளி வாக்கு

தொழிலுக்கு இடைவெளி தூக்கம்
கல்விக்கு இடைவெளி தேர்வு
பணத்துக்கு இடைவெளி தர்மம்
கூடலுக்கு இடைவெளி ஊடல்

வேகத்துக்கு இடைவெளி விவேகம்
வெற்றிக்கு இடைவெளி தோல்வி
வாழ்வுக்கு இடைவெளி சாவு
இடைவெளிக்கு இடைவெளி என்ன?

எழுதியவர் : மது மதி (30-Apr-14, 1:56 pm)
பார்வை : 177

மேலே