வாழும் ஜென்மத்தில் வாழாத காதல் 555
பெண்ணே...
உறவுகள் இருந்தும்
உரிமையின்றி வாழ்ந்த எனக்கு...
உறவாக நீ
வருகிறேன் என்றாய்...
என் உறவு நீயென
நினைத்த போது...
என்னைவிட்டு
செல்கிறாய் நீ...
நீயும் நானும் கைகோர்த்து
நடந்த பாதையெங்கும்...
தனிமையில் நடக்கிறேன்
உறக்கமின்றி இரவில்...
நான் கை நீட்டி
அழைத்த மழைத்துளிகள்...
தஞ்சம் கொண்டது
என் கைகளில்...
உரிமையோடு உன்னை
கைநீட்டி அழைத்தபோது...
கரம் கொடுக்க
மறுத்துவிட்டாய்...
மறு ஜென்மம் வரும்
என்கிறாயடி...
வாழும் ஜென்மத்தில்
வாழவில்லை...
மறுஜென்மத்தில்
நம்பிக்கையும் இல்லை...
மறுஜென்மத்தில் என் நினைவு
உனக்கு வந்தால்...
ஒருமுறை என்னை
நினைத்துபாரடி...
எந்த ரூபத்தில் நான்
மறுஜென்மம் எடுத்தாலும்...
அந்த கணம் உன் சுவாசத்தை
தழுவிகொள்வேன்...
வாழும் ஜென்மத்தில்
வாழாத காதல்...
மறுஜென்மத்தில்
வாழுமா...
பெண்ணே உன் வாழ்வு நலம்
பெற என் வாழ்த்துகள்.....