வளர்ச்சியேனும் பச்சைப்பொய்

ஒப்பந்தமிட்டு கைக்குளுக்கிகொண்டது
அரசியல் தலைகள்
பணவெறி முற்றிய
முதலாளித்துவ காலடிக்கு
மொத்த தேசத்தையும் சமர்ப்பணம் செய்த
மகிழ்ச்சியில் .....

அதிகார திமிரின் உச்சத்தில்
நீண்டு கையெழுத்தானது ஒப்பந்தங்கள்
மக்களை கைகழுவி உதறிவிட்ட
ஆத்ம திருப்தியோடு!....
அரங்கேறியது
ஆட்சிபீடத்தின் வன்ம சூழ்ச்சிகல்
காட்டு கழுகுகளின் தீணிக்கு
நாட்டு குஞ்சுகளை கொன்று
இரையாய் வீசியெரிந்தபடியே ! ......

பதவி போதை தலைக்கேறிய மிடுக்கில்
விரிந்து அசைகிறது கரங்கள்
நஞ்சு நிறைந்த பாம்புகளாய் ..........
பற்கள் தெரிய மிளிர்கிறது முகம்
தேசத்தின் தலையெழுத்துகளை
கிருக்கிப்போட்ட
புன்னகைத் திமிரில் ! ......

திட்டங்கள் பல
திட்டமிட்டே தீட்டப்பட்டது
வல்லாதிக்க வெறிக்கு வசதியாய்
கோழியையும் கொடுத்து
குரல்வளையும் கொடுத்ததுபோல் ! ....
விலைகூவி விற்கப்படுகிறது தேசவளம்
மக்கள் கருத்திற்கு மதிப்பில்லா
மக்களாட்சி சந்தையின்
மலிவுப் பொருளாய்....

பசுமை தளும்பிய
விளைநிலங்கள் மீது
நெடியேருகிறது சுடுக்காட்டு வாசனைகள்
நவீனம் கக்கிய கழிவுகளால் ........
நீண்டோடிய நதிகள்மீதும் வழிகிறது துர்நாற்றங்கள்
அந்நிய தொழிற்சாலைகள் புரண்டிய
இரசாயன காயங்களால் ....

மனிதனுக்கு பயந்து
மண்ணுக்குள் ஒளிந்திருக்கும்
கனிமங்களைகூட
தோண்டிக்கொண்டு பறக்கிறது அன்னியம்
ஆயினும் அது கழிந்த
எச்சில் காசுகளை
பொறுக்கித்தின்று வளர்கிறது
மானங்கெட்ட தேசம் மடமடவென்று !....

துப்பாக்கி சத்தங்களால்
அலறுகிறது
எம் காடுகளின் குரல்வளைகள் ....
இயற்கையை காத்தவனை
விரட்டியும் கொன்றுகுவித்தும்
அதன் சவங்கள் மீது
கட்டி எழுப்பப்படும்
வல்லரசெனும் ரத்தகோட்டைக்காய்

கையகப்படுத்தப்பட்டது
சோறுதந்த பூமிகள்
தடியடி நடத்தியும் தோட்டாக்களைகாட்டியும்
வளர்ச்சியென்ற வசமான பொய்யில்.....
ஆயினும்
விடிந்து தொலைகிறது ஒவ்வொருப்பொழுதும்
அற்பமான மிச்ச வாழ்க்கைக்காய் ! ..

ஒளிர்கிறது தேசம்
கண்டதை விற்று காசாக்கிக்கொள்ளும்
கள்ளச்சந்தையாய் -ஆதலால்
மரணித்த மனித எலும்புகளைக்கூட
விலைபேச காத்திருக்கிறது
இரக்கமற்ற டாலர் தேசத்தின் பணமூட்டைகள் !.....

விளைநிலங்களிலிருந்து
விரட்டி துரத்தப்படுகிறது வாழ்க்கை
வாங்கிய கடனை திருப்பியளிக்க
வக்கற்ற தற்க்கொலைகளாய்..!.
நிரம்பி வழிகிறது மகிழ்ச்சிகள்
இனி சுடுகாடே
சொர்க்கமென்ற உண்மையில்!....

கரையெற்றப்படுகிறது
கடலோடு பிணைந்த கூட்டங்கள்
மீன்களை கசாராக்கி
மூட்டைகட்டி ஏற்றுவதுப்போல்.....
உருமாறியது
நம்பி வாழ்ந்த படகுத்தொழிலும்
பாடைக்கழியென
இனி
முதலாளித்துவ கப்பல்களே
எஜெமான்கலாம்
மொத்த கடலுக்கும் !...

நிலத்தை வெட்டி பிளந்து காயமாக்கி
புதைக்கப்படுகிறது வாயுக் குழாய்கள்
நிலத்தை நம்பி நீண்டு வரிந்த
மனிடத்திரலுக்கு வெட்டும் பிணாக்குழியாய் ....
உலைகொதிக்க வழியின்றி
அணைந்து சாம்பலாகிறது சொந்த வரலாறுகள்
ஆயினும்
கொழுந்துவிட்டு எரிகிறது
அணுஉலையெனும் அபாய விஞ்ஞானம்
உயிரை மயிரேனக்கருதி !...

எல்லா
அழிவையும் சுரண்டலையும்
நாயப்படுத்தியே
தந்திரமாய் நகர்கிறது அரசியல் காய்கள்
வளர்சியேனும் பச்சைப் பொய்யிலும்
வல்லரசெனும் பைத்தியக்கரத்தனத்திலும் !..

எழுதியவர் : நேதாஜி.அ (30-Apr-14, 6:24 pm)
பார்வை : 88

மேலே