கொடுமைகள்
சொல்ல முடியல உள்ளம் கிழியும் அவலத்தை
எங்கு பார்த்தாலும் கொடுமைகள்
நாள்தோறும் தலைப்பு செய்திகளில்
பெண் பாலியல் வல்லுறவு ...........
சிறுவன் சீரழிவு .............
பாடசாலை மாணவி கற்பழிப்பு .......
என பல......
சொல்லொண்ணா துயரமும்
சோர்ந்து போகும் மனமும் இன்று ......
மாற்றம் காணும் மனிதன்
மாய சூதாடுகின்றான் மனதிற்குள்
இதனால் மானம் கேட்டுப்போகிறோம்
குடித்துவிட்டு பெண்களை குதறி கொப்பளிப்பதும்
கையைப்பிடித்து கழுத்தறுப்பதும்
தாய் பெண் பிள்ளை பெற்றால்
முகம் சுழிப்பதும்
நாய் பெண் குட்டியை பையில் போட்டு கடத்துவதும்
ஆடு மாடு பெண்கன்று ஈன்றாள் சந்தோசத்தில்
துள்ளிக்குதிப்பதும் மாறுமா
இல்லாவிட்டால் கத்தியில் நடக்கும்
கதையாகிப் போகும்