நானும் தருமி தான்
நானும் தருமி தான்
நெற்றிகண் திறப்பினும்
குற்றம் குற்றமே
சொன்ன நக்கீரர்கள்
காணமல் போனார்கள்
பால்கணக்கும்
மளிகை கணக்கும்
கண்முன் நிற்பதால்
என் போல் தருமி
பெருகிப் போனர்கள்
குற்றம் கண்டால்
குட்டுதல் நடைமுறை
கையூட்டில் சரியாவது
இலக்கணப் பிழை
பொருளாதாரம் சாட்டையாய்
முதுகில் வீசயில்
குற்றம் காண நேரமேது
சொக்கனை வேண்டி
பாட்டு ஒப்பித்த
தருமிக்கும்
அரசாங்கதை வேண்டி
ஓட்டளித்த
இந்த தருமிக்கும்
என்ன வித்தியாசம்
இலக்கணம் படிப்பிக்காது
இலக்கியம் தந்தது
சொக்கனின் பிழை
இவனை மனிதனாய்
மாற்றாது
இலவசம் தந்தது
அரசின் பிழை
இலவசதை தவிர்த்து
ஈட்ட கற்பியுங்கள்
அன்று
இந்த தருமியும்
நக்கீரனாய் மாறலாம்.....
பாண்டிய இளவல் மது. க