தேடலை அடைவது எப்போது
![](https://eluthu.com/images/loading.gif)
@@
கருமேகம் தாழ் சுடி
சுற்றிவிடும் உலகமிதில் ,
துணை யாரும் இல்லை
பற்று ஏதும் நிலையில்லை
மது உண்ணும் மயக்கிடும் வாழ்க்கையை
ஒளிர் விடும் கண்களோடு இருந்திட்டால்,
நிலைக்குமே உன் உயரம்
உன்னை தாழ்த்தியவர்கள் முன்நிலையில்!
கனவிலும் கன்னியர் வருவர்
கலைந்திடும் மதி கெட்ட மனதில்
அலைபாயும் அருவமாய் இருந்திட்டால்
நிலை பெரும் உயிரை மறந்திடலகுமே!,
கடமை மறந்தால் நிலை மறந்திடுமே,
வந்த நிலை அறிய கடமையை
முடித்தால் தேடலை அடையலாமே...!
@@ அம்முவாகிய நான்...