உலகைக் காப்போம்
மதத்தைப் புரிந்தவன்
மனித நேயம் மிக்கவன்.
பயன்ற்று வாழ்பவனே
தீவினைகளில் திளைக்கிறான்.
கூலிக்கு கேடு செய்யும்
காலிகளின் வேலையே
குண்டை வெடித்து
அப்பாவிகளைக் கொல்வதும்
பொருள்சேதம் செய்வதும்.
கெட்டவர்களை நின்று கொல்லும்
தெய்வம் தண்டிக்க
நீண்ட நாள் ஆகலாம்.
ஆறறிவும் இறையறிவின் ஒருபங்கே
நாமதை மறக்காமல்
முடிந்ததைச் செய்து
தீமைகளை முறியடிக்க
விரைந்து செயல்பட்டு
இப்பூவுலகைக் காத்து
நல்ல மனிதராய் வாழ்வோம்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
