பொய்யான உலகில் இறை தேடும் மனிதா
அன்பென கொண்டால் மெய்யே
அக்கரைஎனும் பொய்க்கறை கண்டு
அறுத்திட்டோம் நம்முறவை
கண்முன் காண்பது மாயை...!!
தாயை நம்பாதோர்
தனி மரமனமாகும்
தத்தளிக்கும் படகிற்கு
அன்பே தான் துடுப்பாகும் !
உறவினில் தாய்மைபோல்
மெய்யான வேறேதும் கிடையாது
உனக்காகத் துடிக்கும் ஓர் உயிரும்
தாய்மைப் போல் வாராது...!!
நான் கண்ட கடவுள் தாய்
மெய் சாட்சியாய் நானே !!
இறை பக்தி கொண்ட மனிதா
இருட்டுக்குள் தேடுவதேனோ?!!
இல்லாள் வந்ததென்னி
இருப்பவளை தொலைத்து
இல்லாத குழந்தைக்கு
இறைபடி தேடி அலைவதெதற்கு?