ஒரு தாயாக,

கடற்கரை ஓரம்
அம்மாவின் கிறுக்கல்கள்
என் கை பிடித்து
அவள் கற்று தந்த மொழிகள்
கடல் அலைகளால் கரைந்து போனாலும்
என் இதயத்தில் காய்ந்து கிடக்கிறது
அவைகளை அழிக்க தெரியாமல்

மின்னல் வெட்டும் வானத்தில்
என்னை மிரட்டும் அந்த இடி சத்தத்தை
உன் காதில் வாங்கி
என் காதை மூடிய உன் கைகள்

நான் கதறியபோது
என்பாரத்தை தாங்கவில்லை என்றாலும்
உன் மார்பை மெத்தையாக்கி
அதில் தூங்க வைத்த உன் உள்ளம்

உன் கண்ணீரை
எனக்கு பாலாக்கி
என் தூக்கத்திலும்
நீ விழித்திருந்தாய்
என் விடியலுக்காக

சோகங்கள் பலயிருந்தும்
அதை உன் சேலையிலே முடிச்சிபோட்டு
என் மூச்சிக்கு காற்றாய் நீ இருந்தாய்

காக்கையோடும் பேசவைத்து
என் கன்னத்தோடு முதம்மிட்டு
என் கைகளோடு உன் கையைகோர்த்து
உன்பாதத்தின் மேல் என் பாதையின் பயணத்திற்கு
நடை பழகிவிட்ட அந்த நாட்கள்

என் சிரிப்புதான் உன் உலகம்
என் அழுகைதான் உன் சோகம்
சோர்வுகள் இருந்தாலும்
என்னை சிரிப்பூட்ட
நீ நடனம் புரிந்த அந்த நினைவுகள்

இது அப்பா
இது தத்தா
இது பாட்டி
என்று புகைப்படத்தோடு
புரியவைத்தாய் என் புதிய உறவுகளை

என் பயணம் முழுவதும் நீ இல்லை
உன் பயணம் முடியும்வரை நீ எனக்காகவே வாழ்ந்தாய்

நீ என்னோடு இருக்கும் வரை
நான் உன்னை நின்னைக்கவில்லை
நீ என்னை விட்டு பிறிந்த நாட்களிருந்துதான்
உன் நினைவுகளோடு வாழ்ந்து கொண்டுயிருக்கிறேன்

நீ மீண்டும் பிறப்பாய்
என் மடியினில்
ஒரு தாயை சுமக்கும் தாயாக வாழ்த்திட எண்ணுகிறேன்
ஒரு தாயாக....,

எழுதியவர் : காந்தி. (3-May-14, 3:37 pm)
பார்வை : 260

மேலே