நட்பு
கூட்ட நெரிசலில்
கை பிடித்து குலுக்கி
“நலமா” என்றவரை
அறியாத போதிலும்
யார் என்று வினவ
மனம் ஒப்பவில்லை !
நலம் விசாரித்து
விசாரிப்புக்கு விடையளித்து
நினைவெனும் கடலில்
நீந்தித் துழாவியும்
ஆழ் மனக் கிணற்றின்
ஆழத்தில் தேடியும்
இனம் காண முடியாத
அந்த கரங்களின் நெகிழ்ச்சி
நட்பென்றே சொல்கிறது !