காதல் தோல்வி

பட்டு போன்ற இதயம்
பாறாங்கல்லானது எப்படி...?

விட்டுப் போன உறவால்
இனி இதயம் துடிப்பதெப்படி...?

கேட்டுப் போன கண்கள்
இனி சூர்யோதயம் காண்பதெப்படி...?

தொட்டுப் பேசும் கைகள்
தொலைந்து போனதெப்படி...?

கட்டுப் போட்ட காதல் கயிறு
கட்டவிழ்ந்து போனதெப்படி...?

பொட்டு வைத்த வட்ட நிலா
வானில் புதைந்து போனதெப்படி...?

வெட்டுப் பட்ட காதல் இதயம்
இனி வெற்றி கொண்டாடுவது எப்படி...???

எழுதியவர் : (6-May-14, 11:51 am)
சேர்த்தது : அன்பரசு
Tanglish : kaadhal tholvi
பார்வை : 135

மேலே