மோடி, லேடி, டாடி, கேடி
மதவாதத்திற்கு ஒரு மோடி
பிடிவாதத்திற்கு ஒரு லேடி
எதிர்வாதத்திற்கு ஒரு டாடி
என்னத்த சொல்ல போடி
கோத்ரா புகழ் மோடி
கோடநாடு வாசி லேடி
கோபாலபுரத்தில் டாடி
கொண்டாடுவோம் பாடி
சாயா போடுவார் மோடி
வாய்தா வாங்குவார் லேடி
வழக்கு போடுவார் டாடி
வாங்கிக்கொள்வார் கோடி
"நமோ" என்றால் மோடி
"அம்மா" என்றால் லேடி
"ஐயா" என்றால் டாடி
அனைவரும் கொள்ளையில் கேடி
மோடி வைப்பார் தாடி
லேடி அடிப்பார் கோடி
டாடி சுருட்டுவார் பாடி
சின்ன வீட்டுக்கும் கோடி
தேர்தல் என்றால் கோடி
தெருவில் புழங்கும் ஆடி
டாஸ்மாக் சரக்கடித்து பாடி
ஜனநாயகம் காப்போம் வாடி