உதவிடும் நெஞ்சம் வேண்டும்
கடலில் கண்டெடுத்த முத்துக்கள்
மனித மனத்தினால் மறுக்கப்பட்டு
குப்பையில் கிடந்த மாமணிகளை
கண்டெடுத்த மனிதர்கள் நிகர்தெய்வங்களே ...
தெய்வத்தினால் முடிக்கும் செயல்களை
உங்களிடம் அவர்கள் நிறைவுகண்டு
உதறிய பல நெஞ்சங்களை
அன்பில்லங்களிடம் அவரும் அனுப்பிவிடுவார் ...
கருவுற்றவர்கள் பெற்றிட்ட உருவுதனையே
சொந்தமென அன்பில்லங்கள் கொண்டாடியே
தாயின் தந்தையின் உருவுக்கொண்டு
தாங்கியே அவர்களை வளர்த்திடுவார் ...
அவர்களின் உறுதுணை நாங்களேன
நாங்கள் உங்களுடன் பங்கேற்க
நீங்கள் (அன்பில்லம்) எங்களுக்கு விண்ணப்பமிட்டு
எங்களிடம் உதவிகள் கேட்பதும்முறையே ...
உதவிகள் செய்திட மனமுள்ளோர்
சிறிதளவு அதனை செய்திட்டாலே
அனாதை சிறார்கள் உணவுமுதல்
உடையையும் கல்வியையும் பெற்றிடுவார் ...
அவர்கள் வாழ்க்கையில் ஓளியேற்றிடவே
நாம் அனைவரும் ஒன்றுபடுவோம்
அனாதைகள் என்ற பெயரினையே
இவ்வையகம் அகற்றுமென செயல்படுவோம் ...
ந தெய்வசிகாமணி