இவரும் ஓர்.................

தாயாய்.....................!

கருவறையில்
பத்து மாதம்தான்
தாய் சுமக்கிறாள்!
வகுப்பறையில்
வாழ்க்கை முழுவதும்
பல மாணவர்களை
சுமக்கும் இவரும்
ஒரு
தாய்தானன்றோ...........!
ஆம்
விலை மதிப்பில்லா
தாயன்றோ.....................!!

தந்தையாய்................!!

அனுபவங்கள் பல
நிறைந்தது வாழக்கை
ஆனால்
தனது வாழ்க்கையையே
அனுபவம் மிக்க
பாடமாய் புகுட்டும்
இவரும் ஓர்
தந்தையன்ரோ....!
ஆம்
ஒரு அருமை தந்தையன்ரோ.....!!

விவசாயியாய்...............!!!

ஆசிரியர்-
ஒரு வித்தியாசமான விவசாயி!
பிறர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து
வாய்சொல்லை வரப்பிட்டு
தரிசென கிடக்கும் மாணவர்கள் மனதில்
விருட்ச விதைகள் நட்டு
அறிவுநீர் பாய்ச்சி
சில நேரம்
தன் கைத்தடியால் களை எடுத்து
கண் அசைவால் காத்து நின்று
அறுவடை மட்டும்
தமக்கே இல்லையென்றபோதும்
மகிழ்ந்திருப்பவர்......!
ஆம்
அறுவடை மட்டும்
தமக்கே இல்லையென்றபோதும்
மகிழ்ந்திருப்பவர்......!!

மேலும்................!!!!

உண்மை உழைப்பு உயர்வு
என்னும் தாரக மந்திரத்தை
உச்சரித்து
அதன் விளைவுகளை
உணர்த்துகின்ற
இவரும் ஓர்
ஆன்மீகவாதியன்ரோ........!
ஆம்
சிறந்த ஆன்மீகவாதியன்ரோ.....!!

வாழ்ந்த காலத்தில்
வாழ்பவர்கள் வாழ்த்தும்படியாகவும்
எதிர் காலத்தில்
வருபவர்கள் வணங்கும்படியாகவும்
நம் வாழ்க்கையை
அழியாப்புகழ் பெரும்
வரலற்றுசுவடுகளாக
வடிவமைக்கும்
ஒரு சிற்பியன்றோ......!
ஆம்
ஒரு தெய்வீக சிற்பியன்றோ......!!

ஆயிரம் பதினாயிரம்
சரணங்களுடன்
உங்கள் நினைவுகளோடு
என் நெஞ்சார்ந்த சமர்ப்பணம்.....!!!

இனியும் என்ன சொல்ல
என் குருவை...........................

நன்றி இறைவா....!





எழுதியவர் : எஸ். ரேணுகா (4-Mar-11, 5:21 pm)
சேர்த்தது : Renuka Srinivasan
பார்வை : 344

மேலே